இட்டது: ஏப்ரல் 1st, 2017, 9:43 pm
by அ.இராமநாதன்

காதல்
தீமிதியில்
கண்வைக்காத நாத்திகர்கள்
இல்லை

காதல்
பொதுவுமைக்கட்சியில்
உறுப்பினராகாத
முதலாளிகள் இல்லை

மதம் சாதி
காதலர்களைத்
தண்டித்திருக்கலாம்
கண்டித்திருக்கலாம்
தடுக்க முடிந்ததில்லை

காதலர்கள்
தோற்றிருக்கிறார்கள்
தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள
காதல்
தோற்றதே
இல்லை

காதல்
எல்லார்க்குமான
சமரச சன்மார்க்கம்

தேடுதுறை
கூடுதுறை
ஓடுதுறை
வாடுதுறை
பாடுதுறைதான் காதல்துறை

காதல்துறையில்
கவனம் தவிர்ப்போம்
துறைதோறும் துறைதோறும்
காதல் செய்வோம்

சிகரங்கள் தொடுவோம்
சாதனைபடைப்போம்
சரித்திரமாவோம்
————————-
பிச்சினிக்காடு இளங்கோ
அந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து