இட்டது: ஏப்ரல் 1st, 2017, 9:12 pm
by அ.இராமநாதன்

இவ்வளவு பலவீனமான நம்மை
பலப்படுத்த நினைத்தது
தவறுதான்

ஒரு நியாயம்
ஒரு நியாயமாற்றம்
நம் பலவீனங்களால் தோற்கிறது
தோற்றது

தோற்கிற ஒன்றைத்தான்
சிலர்
தூக்கி நிறுத்த
ஆயுளைக் கழித்தார்கள

நிலை நிறுத்த வேண்டிய
அவசியத்திற்காத் தோல்வியுற்றார்கள்
தோல்வியை வெற்றியாக கருதினார்கள

அதனால்தான்
அவர்கள்
ஆற்றோடு போகிறவர்கள் இல்லை

காற்றோடு
பறக்கிறவர்களும் இல்லை

ஊரோடும் அவர்கள்
ஒருவரில்லை

ஆனால்…
காதலர்கள் அதை
அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள
மீறியிருக்கிறார்கள
தோற்கடித்திருக்கிறார்கள

சமூகமும்
அவர்களைத் தோற்கடித்திருக்கிறது

அவர்களால்
முடியாவிட்டாலும்
அவர்கள்
முயன்றதால் கிடைத்த தோல்வி
மரியாதைக்குரியது

——————————–
பிச்சினிக்காடு இளங்கோ
அந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து