இட்டது: ஏப்ரல் 1st, 2017, 9:10 pm
by அ.இராமநாதன்
நகர்ந்து விழு பூவே
கீழே ஊர்வலம் போகின்றன
எறும்புகளின் கூட்டம்

————————

இதெல்லாம் ஒரு போட்டியா
ஏளனமாய்ச் சொன்னான்
தோல்வியுற்றவன்

———————–

கனமறியாமல்
சுமக்கிறது கவிதையை
காகிதம்

———————–

வாழ்க்கை என்பது
சொர்க்கம் தான்
தோற்காத வரை

————————-

குட்மார்னிங்கில் துவங்கி
கிட்நைட்டில் முடிக்கிறான்
ஒவ்வொரு நாளையும் தமிழன்

———————-
-ப்ரணா
தானியம் கொத்தும் குருவிகள் –
கவிதை தொகுப்பிலிருந்து