இட்டது: ஏப்ரல் 1st, 2017, 9:07 pm
by அ.இராமநாதன்

பிறந்த குழந்தை அன்னையின் அன்புக்காக
யாசிப்பது இல்லை
அது கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு !

வளரும் குழந்தை தன் தந்தையிடமும்
எதுவும் யாசிப்பது இல்லை !
எதுவும் யோசிக்காமல் ஒரு தந்தை தன்
குழந்தைக்கு தருவது பாசமும் நேசமும் …!

ஒரு நல்ல ஆசானும் தந்தையே அந்த
குழந்தைக்கு !
யாசிக்கத் தேவை இன்றி வளர்ந்து விட்ட அந்த
” குழந்தை “யிடம்
இன்று யாசிப்பது யார் ?

வேறு யாருமில்லை… அந்த வளர்ந்த “குழந்தையின்”
பாசமிகு தந்தை… இப்போ அந்த முதியவர் தன்
” குழந்தையின்”
பாசத்தையும் , நேசத்தையும் யாசிக்கிறார் …
அவருக்கு இப்போ அதுதானே தேவை ….

பணம், காசு வேண்டி தன் கையேந்தவில்லை
அந்த பெரியவர் …
உங்க அன்பையும் , அரவணைப்பையும் அள்ளி
அள்ளி கொடுங்க !

——————————
நடராஜன்