இட்டது: டிசம்பர் 11th, 2017, 10:13 am
by கரூர் கவியன்பன்
ஹ்முண்டாசுக் கவியே
என் முப்பாட்டனே
முன்பிறந்த தமிழால்
முழங்கியவனே.....

வார்த்தை வாளால்
வலம் வந்தாய்

நீ

வாஞ்சைமிகு நடையால்
களம் கண்டாய்

வந்திங்கு வாழவா
வந்தாய்

நீ

வான்புகுந்தும் காலமும்
கண்டாய்

கவிஞர்களின்
கண்டிப்பான தந்தை
உன்னாலேயே நாங்கள்
என்பதில்
ஏது விந்தை..!

தமிழில் பிறந்தாய்
தமிழோடு வளர்ந்தாய்
தமிழாய் வாழ்ந்தாய்
தமிழுக்காகவே மறைந்தாய்

தமிழ் மகனே
என்னுள் இருந்து
எமை உயிர்ப்பிக்கும்
எந்தையே

நின் பாதம் பணிந்தோம்
உன் வழியிலேயே வந்தோம்...