இட்டது: அக்டோபர் 9th, 2016, 6:42 pm
by Gopalakrishnan
என் நண்பனைத் தேடுகிறேன்...!

கடமையென்று ஏதும் செய்ததில்லை
கடனென்று ஏதும் பெற்றதுமில்லை...
அறிவிலோர் ஆசானாய்
ஆசைக்கோர் அன்னையாய்
அன்பிற்கோர் தகப்பனாய்
மெய்க்கோர் காவலனாய்
வாய் மைக்கோர் நண்பனாய்
வழுக்குங்கால் ஊன்று கோலாய்
வாழ்க்கையின் திறவு கோலாய்
என் நிழலாய் , நிழலுக்கான வெளிச்சமாய்
வெளிச்சம் தரும் விளக்காய்
வாழ்விலே விடிவாய் வந்தவனைத் தேடுகிறேன் ,
வாழ்ந்ததைச் சொல்லிவிட
வகுத்ததைப் பங்கிட , வேறொன்றுமில்லை...!