இட்டது: ஜூன் 23rd, 2014, 11:26 pm
by பாலா
Image


எம்பியாக பொறுப்பேற்றுள்ள சச்சின், பாராளுமன்றத்தில் விளையாட்டுத் துறையில் உள்ள பிரச்சனைகளுக்காக மட்டும் பேசாமல், மற்ற சமூக பிரச்சனைகளுக்காகவும் பேச வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் பணியை பாராட்டி, அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து எம்.பி.பதவியை ஏற்றுக் கொண்ட சச்சின், கிரிக்கெட் மட்டுமின்றி, மற்ற விளையாட்டுகளில் உள்ள பிரச்சனைகளுக்காகவும் தான் பணியாற்ற போவதாக கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் எம்.பி.யாக பொறுப்பேற்றுள்ள சச்சின், விளையாட்டுத் துறைகளுக்காக மட்டும் பாராளுமன்றத்தில் பேசாமல், மற்ற சமுதாய பிரச்சனைகளுக்காகவும் பேச வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது

என்னை பொறுத்தவரை சச்சின் விளையாட்டுத் துறையோடு தனது பணியை நிறுத்தி கொள்ள கூடாது. நாட்டின் வளர்ச்சிக்காக சச்சின் தனக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்தி பல சமுதாய பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்காக தனது காலக்கட்டத்தில் உள்ளவர்களின் கருத்துகளை குறிக்கும் வகையில் சச்சின் பாராளுமன்றத்தில் பேச வேண்டும். சச்சினுக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டிற்கு வளர்ச்சி ஏற்பட்டால் அது சிறப்பான பணியாகும்.

சச்சினை போன்ற நேர்மை மற்றும் நம்பத்தன்மை கொண்ட மக்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவது நாட்டிற்கு பெரும் பயனை தரும். பாராளுமன்றத்தில் சச்சின் தனது இன்னிங்ஸில், டெஸ்ட் போட்டிகளை போல மெதுவாக துவங்கி, பின்பு அதிரடிக்கு மாறுவார் என்று நினைக்கிறேன்.
பாராளுமன்றத்தில் முதலில் விளையாட்டு துறை தொடர்பான பிரச்சனைகளில் சச்சின் பேச ஆரம்பிக்க வேண்டும். அதன்பிறகு மற்ற பிரச்சனைகளை குறித்தும் பேச வேண்டும். இதன் மூலம் சச்சின் பொதுமக்களை சந்தோஷப்படுத்த முடியும். மேலும் அப்போது சச்சினின் பேச்சை கேட்க அனைத்து தரப்பினரும் விரும்புவார்கள். எம்.பி. பதவியில் பொறுப்புடன் செயல்பட சச்சினிடம் திறமை உள்ளது என்றார்.