இட்டது: நவம்பர் 14th, 2017, 7:08 am
by கரூர் கவியன்பன்
சென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

பிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

A strengthening depression in the Bay of Bengal is likely to bring heavy rain to the eastern Indian provinces of Andhra Pradesh to West Bengal over the next 4-5 days which may cause flooding across the region. SKL pic.twitter.com/95Owgq9lYa
— BBC Weather (@bbcweather) November 13, 2017


அதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது