இட்டது: ஏப்ரல் 3rd, 2017, 7:39 am
by அ.இராமநாதன்
புதுடெல்லி,
ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.

உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு
அறிவித்தது.
-
தினபூமி