இட்டது: ஏப்ரல் 3rd, 2017, 7:37 am
by அ.இராமநாதன்

புதுடெல்லி -
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது
பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்
தமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளனர்.

பிரதமர் வாழ்த்து

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது
80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
வாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்
பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள
மாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.

கவர்னர் வாழ்த்து
இதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது
அன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்
வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது
இதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது
வெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.

நீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”
என வாழ்த்தியிருக்கிறார்.
-
-----------------------------------
தினபூமி