இட்டது: ஏப்ரல் 3rd, 2017, 7:34 am
by அ.இராமநாதன்
ஜம்மு,

காஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று
திறந்துவைத்தார்.

ரூ.3,720 கோடி
-
காஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,
ஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்
செனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு
சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்
ஆண்டு தொடங்கியது.
-
இமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்
ரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை
ஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.
-
சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்

மாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந
ரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை
திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா
தையில் சிறிது தூரம் சென்று வந்தார்.
-
----------------------------