இட்டது: ஜூன் 10th, 2014, 9:47 am
by கார்த்திவாசுகி
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பசுமை தொழில் நுட்ப மையம் சார்பில் சூரியஒளி சக்தி உதவியுடன் பழங்கள், மீன், பருப்புகளை உலர்த்தும் கருவி (Solar Air Heater) வடிவமைக்கப்பட்டுள்ளது.
Image

இது தொடர்பாக பசுமை தொழில் நுட்ப மைய உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ.ஸ்ரீகுமார் கூறியது:

பல்கலைக்கழக மானியக் குழு திட்டத்தின்படி வேளாண்மை மற்றும் தொழில்துறைகளில் சோலார் ஏர் ஹீட்டர் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதுவையில் மீன்பிடித் தொழில் அதிகளவில் நடக்கிறது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சோலார் ஏர் ஹீட்டர் கருவி மூலம் மீன்களை சுகாதாரமான முறையில் உலர்த்தி ஏற்றுமதி செய்யலாம்.
சூரியஒளி மூலம் உலர்த்துவதால் கிருமிகள், பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. மேலும் பருவநிலை மாற்றத்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
விவசாயிகள் இதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
எரிபொருள் சிக்கனம், உலர்த்தும் நேரமும் குறைகிறது.
வேளாண் உற்பத்திப் பொருள்களை உலர்த்துவதன் மூலம் குறைந்தது 10 சதவீதம் அளவு லாபத்தைப் பெருக்கலாம்.
சூரியஒளி உலர் கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 20-25 கிலோ பொருள்களை உலர்த்த முடியும். இக்கருவியை விரைவில் வெளிச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார் ஸ்ரீகுமார்.

நன்றி: தினமணி