இட்டது: மே 26th, 2014, 1:19 pm
by வேட்டையன்
Image

நரேந்திர மோடி பதவியேற்கும் தினத்தின் பலன் அடிப்படையில், நாட்டில் விவசாய புரட்சி ஏற்படும்' என, ஆற்காடு ஜோதிடர் சோமசேகரன் கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:நரேந்திர மோடி, 1950 செப்டம்பர், 17ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சுக்லபட்ஷ சஷ்டியில், அனுஷம் நட்சத்திரத்தில், காலை, 11:00 மணிக்கு பிறந்துள்ளார். சனியின் ஆதிக்கத்தில், சனி மகா திசையில் பிறந்த, இவருக்கு தற்சமயம், சூரிய தசையில் சுக்ர புத்தி நடைபெறுகிறது.இவருடைய ஜாதகத்தில், கஜகேசரி யோகம், சந்திர மங்கள யோகம், வசுமதி யோகம், நீசபங்க ராஜயோகம், வலசி யோகம், லட்சுமி யோகம், எக்காள யோகம், பிரம்ம யோகம், ராஜயோகம் போன்ற யோகங்களுடன், மிக முக்கியமாக, இவருடைய ஜாதகத்தில், குரு, சுக்கிரன் கேந்திரங்களில் உள்ளதால், மிக யோகமான ராஜலக்ஷ்ண யோகம் உள்ளது.

பதவியேற்கும் நாள் சிறப்பு:
நரேந்திர மோடி, இன்று (26ம் தேதி) பிரதமராக பதவியேற்கிறார். இவரின் பிறந்த தேதி எண் எட்டு. பிறந்த தேதியின் கூட்டு எண் ஐந்து. பதவியேற்கும் ஓரை சுக்ர ஓரை, பரணி நட்சத்திரம். இவரது நட்சத்திரத்திற்கு, 13வது நட்சத்திரமான பரணி, தாராபலம் உள்ள நட்சத்திரம்.இவருடைய ராசியான விருட்சிகத்திற்கு, பதவியேற்கும் ராசி, மேஷமாக அமைவதால், சந்திர பலம் உண்டு. இவர் பிறந்தது, தேவர்களுக்கு அதிபதியாக குரு ஓரையில்; பதவியேற்பது அசுரர்களுக்கு அதிபதியான சுக்ர ஓரையில். எனவே, குரு, சுக்ர யுத்தத்தில், குருவிற்கே வெற்றி என்பதால், தற்சமயம் நாடு பெரும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளதாலும், விருட்சிக ராசிக்கு ஆறில் சந்திரன், சத்ரு ஜெயம் என்பதால், எதிரிகளை அடக்கக் கூடியதாக அமையும்.இவர் மரணயோகத்தில் பதவியேற்பதால், எதிரிகளினால் ஏற்படுத்தப்படும் உயிர் ஆபத்திலிருந்து காக்கப்படுவார். பிரதோஷ நேரத்தில், திரயோதசியில் பிரதோஷத்தில் பதவி ஏற்பதால், எந்த தோஷமும் இவரை தாக்காது.

இவர் பிறந்த தேதியின் எண் 8. பதவியேற்கும் தேதி கூட்டு எண்ணும் 8. எனவே, சனி ஆதிக்கம் பரணிக்கு, மிக உத்தமமானதால், ஸ்திரத்தன்மை வாய்ந்த அரசை அமைக்க முடியும். நீர் கிரகத்தின் கூட்டு எண்ணான, சந்திரன் ஆதிக்கத்தில், பதவியேற்பதால் நதி நீர் இணைப்பின் மூலம், மிகப் பெரிய வரலாற்று சாதனைகளை படைக்க முடியும். இதன் மூலம், மாபெரும் விவசாயப் புரட்சி ஏற்படுவதால், வேலையில்லா திண்டாட்டம் வெகுவாக குறையும். ராணுவத்தின் அதிபதியான சுக்ர ஓரையில், நீர் நிலைகளுக்கு காரகரான சந்திரனின் கூட்டு எண்ணின் ஆதிக்கத்தில், அந்நிய நாட்டின் முதலீடு, ஸ்திரமான அரசின் அம்சமான, சனியின் உன்னதமான திரயோதசியில், இவர் லேசான வர்ண உடையணிந்து, குறிப்பாக பச்சை, மஞ்சள், நீல வர்ண உடையில் பதவியேற்றால், நாடு அமைதி, வளம், வளர்ச்சி பாதையில் செல்வது நிச்சயம்.இவ்வாறு, சோமசேகரன் கூறினார்.


நன்றி-தினமலர்