இட்டது: நவம்பர் 1st, 2016, 11:12 pm
by கரூர் கவியன்பன்
பூப்படையும் பூவிற்கு
தெரிவதில்லை
புது உலகம் காண
பிறப்பெடுக்கிறோம் என்று

அன்றில் பறவையாய்
அறிந்திருக்கவில்லை
ஒன்றில் இருவரும்
இணைத்திருப்போம் என்று

புல்லாங்குழல்
புரிந்திருக்கவில்லை
உள் புகும் காற்று
உறவாய் கலந்தது என்று

காமம் செப்பாது
கண்டது மொழிதல்
கவிக்கு அழகு
கவின்மிகு வாழ்க்கை
மனதிற்கு அழகு
திருமணத்திற்கு அழகு

25 என்பது
கழுத்தில் நாணேறிய
ஆண்டுக்கா கணக்கு

இல்லை.... இல்லை....


25 என்பது .....
அவர் கழுத்தில்
உன் குரலும்
உன் முகத்தில்
அவர் உணர்வும்
உணர்தலும்
உரைத்தலுமே
அழகின் அழகு

ஆண்டாண்டு கடப்பினும்
இரண்டில் ஒன்றாய்
இயைந்து வாழ
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.


இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள் தங்களுக்கு..... :-git :-sing :-bdc